புதுடெல்லி, ஜூலை 7 – இந்தியாவில் அடிப்படைக் கல்வி கூட பெற முடியாமல் 14 லட்சம் குழந்தைகள் உள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளின் கல்வி குறித்து ஆய்வுகளை நடத்திய யுனெஸ்கோ அமைப்பு, சமீபத்தில் அது குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “உலகம் முழுவதிலும் 57.8 மில்லியன் குழந்தைகள் நடுநிலைப்பள்ளியை கூட தாண்ட முடியாமல் தவிக்கின்றனர்” என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும், ஆறு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு படிப்பறிவு கொடுக்க முடியாத நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடம் வகிப்பது கவலை அளிப்பதாக உள்ளது என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
அதே சமயம் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 1 சதவீதம் மட்டுமே என கல்வி தொடர்பாக அந்நாட்டின் முயற்சியை பாராட்டி உள்ளது.
2010 முதல் 2012-ம் ஆண்டிற்கான இடைப்பட்ட காலத்தில் கல்விக்கு வழங்கும் உதவிகளை இந்திய அரசு நிறுத்தியதே இச்சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
ஆப்பிரிக்க நாடான ப்ருண்டியில் 2005-ம் ஆண்டு கல்வி கற்காதவர்களின் எண்ணிக்கை 54 சதவிகிம் இருந்ததாகவும், அந்நாடு கல்விக்கட்டணத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து தற்போது அந்நாட்டில் 94 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளதாக யுனெஸ்கோ அறிவுறுத்தி உள்ளது.