Home வாழ் நலம் இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு!

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு!

629
0
SHARE
Ad

fishsஜூலை 7 – வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, வளர்முக நாடுகளிலும் நிகழ்கின்ற மரணங்களுக்கு இதயத்தாக்கும், மூளைத்தாக்குமே பெரும்பாலும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளைத் தாக்கினால் இறப்பவர்களை விட இதயத் தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. மீன் மற்றும் மீன் பொருள்களை உணவில் கணிசமாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவ்வகை இதயத் தாக்குகளைத் தவிர்க்கலாம் என்பதும் அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது.

fish (1)இதயத்தாக்கிற்கான காரணம்:

#TamilSchoolmychoice

இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் கரோனரித் தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது, அவ்வழியே இரத்தவோட்டம் குறைவதாலோ அல்லது முற்றிலுமாகத் தடைப்படுவதன் விளைவாகவோ இதயத்தாக்கு உண்டாகிறது. இதயத்திற்குக் கிடைக்கும் இரத்தம் குறிப்பாக இரு முக்கிய காரணங்களால் தடைப்படுகிறது.

1. இரத்தக் குழாய்களில் அழுக்குகள் படிந்து குழாய் விட்டம் குறுகுதல்

2. இதயத் தமனிகளில் இரத்தம் உறைந்து போதல்.

இயல்பான நிலைகளில் இரத்த ஓட்டத்தில் எவ்விதத்தடங்கலும் ஏற்படுவதில்லை. மேற்சொன்ன இரு கோளாறுகள் உண்டாகும் போது, கரோனரித் தமனிகளின் இரத்தக் குழாய்கள் தடித்து அவற்றின் உள்விட்டம் குறுகுகின்ற போது இரத்தம் போக முடியாமல் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு விடுகிறது.

மேலும், இரத்தத்திலுள்ள தட்டையங்கள் பிசுபிசுப்படைந்து இரத்தக் குழாய்களில் ஒட்டிக் கொள்வதாலும் இரத்தம் உறைதல் தூண்டப்பெற்று இரத்தக்குழாய் அடைப்பையும், இதயத்தாக்கையும் ஏற்படுத்துகிறது.

Grilled Fish Entree in Barcelonaமீன் நல்ல உணவாவதோடு, நோய்களுக்குக், குறிப்பாக இதய நோய்களுக்கு ஏற்ற மருந்தாகவும் செயல்படுகின்றது. வாரத்திற்கு இருமுறை மீன் உணவுகளுடன் கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு, இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்பு பாதியாகக் குறைக்கப்படுகிறது.

தாவர எண்ணெய்யையும், மீன் எண்ணெய்யையும் ஒப்பீட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், நான்கு வாரங்கள் மீன் எண்ணெய் உட்கொண்டவர்களின் கொழுப்பின் அளவு, அதே நான்கு வாரங்கள் தாவர எண்ணெய் எடுத்துக் கொண்டவர்களுடைய கொழுப்பின் அளவை விட 5 மடங்கு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மீன்களின் ஒமேகா 3 எனப்படும் உயர்அடர்த்தி லிப்போ புரோட்டீன் மிகுந்தும் தாழ் அடர்த்தி புரோட்டீன் குறைந்தும் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீன் எண்ணெய் அடங்கிய பொருள்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும் மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் காட்லிவர் ஆயில் மற்றும் ஷார்க் லிவர் ஆயில் போன்றவைகளில் உடலுக்கு நன்மை அளிக்கும்.

fish,செறிவுறா கொழுப்பு அமிலங்களுடன் வைட்டமின்களும் அடங்கியுள்ளன. மீன்களின் தசைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயில் இவ்வைட்டமின்கள் மிகுதியாக இருப்பதில்லை. எனவே இதய நோயுற்றவர்கள் இவ்வகை மீன் எண்ணெயை உட்கொள்வது நல்லது.

மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன.

இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் வைட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது. மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு வராமல் காக்கிறது மீன்.