Home வணிகம்/தொழில் நுட்பம் பொருளாதாரத்தில் நிலையான ஆளுமையை நோக்கி இந்தியா!  

பொருளாதாரத்தில் நிலையான ஆளுமையை நோக்கி இந்தியா!  

988
0
SHARE
Ad

india2ஜூலை 8 – இந்தியாவில் பல வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள நிலையான அரசின் காரணமாகவும், இந்திய பிரதமர் மோடியின் மீது ஏற்பட்டுள்ள தீர்க்கமான நம்பிக்கை காரணமாகவும் பல்வேறு அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் பல ஆயிரம் கோடி டாலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்.

இதனால் ஆசியாவில் நிலையான பொருளாதார ஆளுமையை நோக்கி இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது. 2014-ம் ஆண்டின், முதல் ஆறு மாத காலத்தில் (ஜனவரி – ஜூன்), அந்நிய முதலீட்டாளர்கள் 2,040 கோடி டாலர்களை இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.

indiaகடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான அரையாண்டில் பங்குச்சந்தையில் 996 கோடி டாலர்கள் முதலீடும், கடன் சந்தையில் 1,042 கோடி டாலர் முதலீடும் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’, கடந்த ஆறு மாத காலத்தில், 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.