Home கலை உலகம் விஜய் டிவி சரவணன் – மீனாட்சி ஜோடி இரகசியத் திருமணம்!

விஜய் டிவி சரவணன் – மீனாட்சி ஜோடி இரகசியத் திருமணம்!

726
0
SHARE
Ad

08-saravanan-meenakshi-marriag

சென்னை, ஜூலை 9 – விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாகவும் அனைவராலும் விரும்பப்படுகிற வகையிலும் ஓடிக் கொண்டிருக்கின்ற தொடர் சரவணன் மீனாட்சி.

இதில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று திருப்பதியில் இரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பிரபல இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

இத்தொடரில் தம்பதியராக நடித்துள்ள இவர்கள் இருவரும் மிகவும் ஈடுபாட்டோடு நடித்தனர். நிஜ தம்பதிகளாக இருப்பார்களோ என்று மக்கள் என்று அனைவரும் எண்ணும் அளவுக்கு பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தினர்.

ஆனால் தாங்கள் உண்மையான தம்பதிகள் இல்லை என்றும், காதலிக்கவும் இல்லை என்றும் செந்தில் கூறி வந்தார்.

அண்மையில் நடந்த விஜய் தொலைக்காட்சி விருதுகள் வழங்கும் விழாவில் சரவணன் மீனாட்சி தொடர்காக, சிறந்த ஜோடிகள் பிரிவில் இவர்களின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அந்நிகழ்வில் நீங்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் தம்பதிகளா? என்று கேள்வி எழுந்த போது கூட அவர்கள் இல்லை என்று மறுத்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும்  திருப்பதில் நேற்று இரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள் என்று தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

மிகவும் ஆராவாராமாக பிரபலங்கள் திருமணம் செய்துக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், மிகவும் இரகசியமாக இவர்கள் திருமணம் செய்துக் கொண்டது ஏன் என்று தான் புரியவில்லை.

இயக்குநர் சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான செந்தில், ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர் என்றும் கூறப்படுகின்றது.