பிரேசில், ஜூலை 10 – உலகக் கிண்ணப் போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் குழு படு மோசமாகத் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த குழுவைக் கிண்டல் செய்து பலவகையான படங்களையும் செய்திகளையும் காற்பந்து இரசிகர்களும், ஆர்வலர்களும் ட்விட்டர் பக்கங்களிலும், இணையத் தளங்களிலும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அவற்றில் சில சுவாரசியமான படக் காட்சிகள்: உலகப் புகழ் பெற்ற பிரேசில் நாட்டு சின்னமான – கைகளை விரித்து நிற்கும் இயேசுநாதர் சிலை – அவமானத்தால் முகத்தை மூடிக்கொண்டது போல் குறும்பு படம் பிரேசில் தோற்றதால் கொலைவெறியோடு ஆடையைக் கடித்துக் கிழிக்கும் இரசிகர் ஒருவர்.. ஜெர்மனியின் தாக்குதலால் பிரேசில் விளையாட்டாளர்கள் தங்களின் கோல் முனையிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருக்க, வேலையில்லாமல் ஜெர்மன் கோல் காவலர் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் என்பது போன்ற கற்பனைக் காட்சி
பிரேசில் பெறப்போகும் கோல்களின் எண்ணிக்கை எனக்கு முன்கூட்டியே தெரியும் என்பது போல் செவன்-அப் பானத்தின் சின்னத்தை நெய்மார் பிடித்திருப்பது போல் கேலிப் படம்
பிரேசில் நாட்டு புகழ்பெற்ற இயேசுநாதர் சின்னத்திற்கு பதிலாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா படத்தைப் பொருத்தி கற்பனை செய்திருக்கும் ஒரு புத்திசாலி…