Home இந்தியா நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தூங்கினாரா?: பா.ஜ.க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தூங்கினாரா?: பா.ஜ.க குற்றச்சாட்டு!

582
0
SHARE
Ad

rahul 1புதுடெல்லி, ஜூலை 10 – நாடாளுமன்றத்தில் நேற்று விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி, தலையை வலதுபுறமாக தொங்க விட்டு தூங்கிக்கொண்டிருந்தது போன்று காட்சியளித்தார்.

அந்த காட்சி பாராளுமன்ற சி.சி.டி.வி.யில் பதிவானது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ராகுல் தூங்கவில்லை என்று காங்கிரஸ் மறுத்தது. இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறும்போது, “இது உண்மை அல்ல.

அனைத்து அவதூறுகளையும் ஒட்டுமொத்தமாக மறுக்கிறேன். கடந்த 7 வாரங்களாக இந்த அரசு அற்பத்தனமான, பழிவாங்கும் அரசியலில்தான் ஈடுபட்டு வருகிறது” என கூறினார்.

#TamilSchoolmychoice

rahul_sleepingஅதே நேரத்தில் பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் கூறுகையில்,”விலைவாசி உயர்வு பிரச்சனையில், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு தூங்கிக்கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் இது குறித்த விவாதம் நடக்கும்போது காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல் தூங்கிவிட்டார்.

விலைவாசி உயர்வு, பணவீக்கம் பற்றி விவாதிக்க காங்கிரஸ் தயார் இல்லை. கோஷத்துக்காக இந்த வார்த்தைகளை முழங்குகின்றனர்” என குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா கூறும்போது, “அற்பத்தனமான காரியம், பெரிதுபடுத்தப்பட்டுவிட்டது. இது சர்ச்சைக்குரியது அல்ல” என கூறினார்.