Home நாடு பிரதமரின் மனைவியாக இருப்பது எளிதல்ல – ரோஸ்மா கருத்து

பிரதமரின் மனைவியாக இருப்பது எளிதல்ல – ரோஸ்மா கருத்து

601
0
SHARE
Ad

rosmah-mansorகோலாலம்பூர், ஜூலை 11 – ஒரு நாட்டின் தலைவரின் மனைவியாக இருப்பது கடினமான ஒன்று. அதற்கு பல தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா மான்சோர் கூறியுள்ளார்.

தான் இந்த நோன்பு மாதத்தில் நன்கு உறங்குவதில்லை என்றும், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்குவதாகவும் ரோஸ்மா குறிப்பிட்டுள்ளார்.

ரோஸ்மா நேற்று காலையில் கோலாலம்பூர் செராஸ் பொழுதுபோக்கு மையத்தில் காலையில் நோன்பு முன்னிட்டு உதவி வழங்கினார்.

#TamilSchoolmychoice

“நாட்டின் தலைவரின் மனைவியாக இருப்பதால் மக்கள் மற்றும் நாட்டிற்காக தியாகங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார். எனவே  ஒரு தலைவரின் மனைவியாக இருப்பது எளிதானது என்று யாரும் கூறவேண்டாம்” என்றும் ரோஸ்மாதனது கூறியுள்ளார்.

மேலும், “அன்றைய காலத்தில், நான் இளமையாக இருந்தேன். இப்போது …,” என்று ரோஸ்மா கூறி முடிக்கும் முன், “இன்னும் இளமை” என்று பார்வையாளர்கள் அதற்கான பதிலளித்தப் போது ரோஸ்மா புன்னகையில் நனைந்தார்.

எனினும், ரோஸ்மா தான் தோற்றத்தில் மட்டும் பார்ப்பதற்கு இளமையாக இருப்பதாகவும், ஆனால், உடல் ரீதியாக சோர்வாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு நமது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் நிம்மதியாக தூங்குவதற்கு நேரமின்றி இருக்கின்றார் பிரதமர் மனைவி ரோஸ்மா மான்சூர்.

ரோஸ்மா இந்நிகழ்வில் கடந்த ஆறு ஆண்டுகளாக கலந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.