Home நாடு 1 உத்தாமாவிலுள்ள அங்காடியில் தீ! எல்டிபி நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்!

1 உத்தாமாவிலுள்ள அங்காடியில் தீ! எல்டிபி நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல்!

597
0
SHARE
Ad

genimageபெட்டாலிங் ஜெயா, ஜூலை 11 – இன்று காலையில் 1 உத்தாமா வணிக வளாகத்தில் தீப்பற்றியதால் அங்கு பெரிய அளவிலான புகைமூட்டம் ஏற்பட்டது. டாமான்சாரா -பூச்சோங் நெடுஞ்சாலையில் சென்ற மோட்டார் ஓட்டிகள் அதனை வேடிக்கை பார்த்தவாறு மெதுவாக நகர்ந்ததால் கடும் சாலை நெரிசல் ஏற்பட்டது.

அந்த வணிக வளாகத்தில், உள்ள புட் ரிபப்லிங் புட் கோர்ட் என்ற உணவுவிடுதியில் இந்த சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டதாக 1 உத்தாமாவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice