ரியோ டி ஜெனிரோ, ஜூலை 14 – உலகக் கிண்ணப் போட்டிகளில் நிறைவாக இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தைக் காண உலகத் தலைவர்கள் பிரேசிலுக்கு வருகை தந்துள்ளனர்.
இறுதி ஆட்டத்தைக் காண வந்திருக்கும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமாவை மதிய உணவு விருந்திற்கு வரவேற்கும் பிரேசிலிய அதிபர் டில்மா ரோஸ்ஸஃப்.
கடந்த 2010ஆம் ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டிகளை தென் ஆப்பிரிக்கா ஏற்று நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜெண்டினாவுக்கு அதிகாரத்துவ வருகையொன்றை மேற்கொண்டு விட்டு, ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தைக் காண வருகை தந்திருக்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் உரையாடும் காட்சி.
உக்ரேன் அரசியல் பிரச்சனையால் மேற்கத்திய நாடுகளுடன் மோதலை வளர்த்துக் கொண்டுள்ள ரஷிய அதிபர் புடின், இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மற்ற தலைவர்களுடன் கலந்து கொள்வது நல்லெண்ணத்தை வளர்க்கும் அரசியல் முக்கியத்துவம் மிக்க வருகையாக மதிப்பிடப்படுகின்றது.
இறுதி ஆட்டத்தைக் காண வருகை தந்திருக்கும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் மற்றும் ஜெர்மன் தலைவர் ஜோசிம் கவுக் இருக்கைகளில் அமர்கின்றனர்.
இறுதி ஆட்டத்தில் மோதும் ஜெர்மனிக்கு ஆதரவு தரும் நோக்கத்தில் மெர்க்கல் வருகை தந்திருக்கின்றார்.
படங்கள்: EPA