Home வணிகம்/தொழில் நுட்பம் சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூக்கு ரூ.1,849 கோடி அபராதம்!

சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூக்கு ரூ.1,849 கோடி அபராதம்!

603
0
SHARE
Ad

rajuமும்பை, ஜூலை 16 – “சத்யம் கம்ப்யூட்டர்ஸ்” நிறுவன மோசடி வழக்கை விசாரித்த ஐதராபாத் நீதிமன்றம், வரும் 28-ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது. இந்நிலையில் செபி நேற்று 65 பக்க உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் 14 ஆண்டுகளுக்கு முதலீட்டு சந்தையில் ஈடுபட தடை விதித்துள்ளது.

Ramalingaமேலும், சட்டவிரோதமாக லாபம் ஈட்டிய வருவாய் ரூ.1,849 கோடியை இன்னும் 45 நாட்களுக்குள் செபியிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த தொகைக்கு ஜூலை 7, 2009 தேதியிலிருந்து ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டியை கட்ட வேண்டுமென செபி உத்தரவிட்டுள்ளது.