புத்ரா ஜெயா, ஜூலை 16 – சபா மாநிலத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஊடுருவ முயலும் மர்ம நபர்களை சுட்டுத்தள்ள அனுமதி அளிக்கும் முன், உயர் அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட செயல் முறைகளை (Standard Operating Procedure) பின்பற்ற வேண்டும் என பிரதமர் நஜிப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.
களத்தில் இறங்கும் மலேசியப் படையினர், சூழ்நிலையை நன்கு உணர்ந்த பின்னர் செயல்பாடுகளில் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றும் நஜிப் கூறியுள்ளார்.
“குழப்பத்தினாலும், தவறாகப் புரிந்து கொள்வதாலும் அப்பாவிகள் யாரும் இந்த நடவடிக்கைகளால் உயிரிழந்து விடக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்” என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சபாவில் அத்துமீறி ஊடுருவ முயலும் அந்நியர்களை தடுத்து நிறுத்த அதிரடி நடவடிக்கைகள் தேவை என்பதையும் நஜிப் ஒப்புக்கொண்டார்.