Home கலை உலகம் 110 கிலோ எடையுடன் ராட்சஷ உருவம் – ‘ஐ’ படத்தில் விக்ரம்!

110 கிலோ எடையுடன் ராட்சஷ உருவம் – ‘ஐ’ படத்தில் விக்ரம்!

1086
0
SHARE
Ad

maxresdefaultசென்னை, ஜூலை 17 – ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில் உருவாகியிருக்கும் “ஐ” திரைப்படம் எப்போது வெளிவரும் என இப்பொழுதே உலக அளவில் பலர் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். காரணம் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சீயான் விக்ரம் இரண்டு ஆண்டுகள் தன்னை மொத்தமாக அற்பணித்திருக்கிறார்.

உடல் எடையை மிகவும் குறைத்து எலும்பாக தோற்றமளிக்கும் ஒரு கதாப்பாத்திரம், ராட்சஸ உருவத்திற்காக சுமார் 110 கிலோ எடையுடன் ஒரு கதாப்பாத்திரம், மனித மிருகமாக மாமிச மலை போல் தோற்றமளிக்கும் ஒரு கதாப்பாத்திரம் என வெவ்வேறு கதாப்பாத்திரங்களுக்காக தனது உடல் எடையை ஏற்றி, இறக்கி மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.

இந்த படத்தின் முன்னோட்ட காட்சியைப் பார்த்த பிரபல குமுதம் வார இதழ் குழு, இந்த வார இதழில் அப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அந்த தகவல்களை கீழே காணலாம்:-

இதில் மாமிச மலை மாதிரி இருக்கும் விக்ரம் ஒரு அபூர்வ விலங்கினம் போல தென்படுகிறார். ஒரு காட்சியில் அருவிக்கு அருகில்ஆலமர விழுதைப் பற்றிக் கொண்டு பறக்கும் காட்சி.

அதில் சரியான பிடிமானம் இல்லாத காரணத்தால் கைநழுவி குறைந்தது 100 அடி வரையில் கீழேச் சென்று வழுக்கி விழுந்திருக்கிறார். ஆனால், பலத்த அடியில்லாமல் பாதுகாப்பாக மீண்டுள்ளார்.

படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடி ஆகும். இத்திரைப்படத்திற்காக பத்தாயிரம் பேர் வேலை பார்த்திருக்கின்றனர். மேக்கப் செலவுகள் மட்டும் 5 கோடி. உணவிற்கான மொத்த செலவு 5 கோடி.

விமான சீட்டு செலவுகள் 8 கோடி மற்றும் படத்தில் உதவி இயக்குநர்களாக வேலை செய்தவர்களுக்கு மாத சம்பளம் ஏழு லட்சம் என கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளனர்.

காசி, பிதாமகன் போன்ற திரைப்படத்தில் வித்தியாசமான் கதாபாத்திரமும், தோற்றமும் கொண்டு நடித்த விக்ரம் இந்த ஐ படத்திலும் மிக அதிசயமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

படத்தின் மொத்த ஷூட்டிங் நாட்கள் இரண்டு வருடம், நான்கு மாதங்கள் ஆகும். 60 நாட்கள் சீனாவில் தங்கி 40% திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் “என்னோடு நீயிருந்தால், உயிரோடு நான் இருப்பேன்” எனும் பாடலை சீனாவில் 5 கோடியில் செட் செய்துள்ளனர்.

இப்பாடலில் விக்ரமின் எடை 110 கிலோ ஆகும். எந்த ஒரு கிராபிக்ஸும் இல்லை. இப்பாடலுக்காகவே சீயான் எடையை உயர்த்தியுள்ளார். கொடூர முகம், காண்டாமிருகம் அளவுக்கு உடம்பு, கொரில்லா போன்ற உடற்கட்டு கொண்டு அசத்தியிருக்கின்றார் விக்ரம்.

vikramகொடைக்கானலில் தொழிலதிபர் விஜய்மல்லையாவிற்கு சொந்தமான 300 ஏக்கர் குதிரைப் பண்ணையில் இன்னொரு பாடலை செட் போட்டு எடுத்துள்ளனர்.

இதில்,அற்புதமான விஷயம் என்னவென்றால், ஒரு வருடமாக விதவிதமான ரோஜாப் பூக்களை இரண்டு ஏக்கரில் வளர்த்து அதில் பாடல் காட்சியை எடுத்துள்ளனர்.

பெரும்பாலும், திரைப்படங்களில் பூக்கள் உள்ள இடங்களை தேடிச்சென்று படம் எடுப்பார்கள். ஆனால், இத்திரைப்படத்தில் சொந்தமாகவே பூக்களை வளர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விக்ரமிற்கு  போடப்பட்ட மேக் அப் ஒரு வகை இரசாயனம் நிரம்பியது. இதனால், அவர் குளிர்ந்த இடத்தில் இருப்பதற்காக  நியூசிலாந்து ’வோட்டோ’ நிறுவனத்தினர் குளிர்சாதனப்பெட்டியை தயாரித்தனர்.

ai vikram,விக்ரம் அந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் 2 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் அவருக்கு சாப்பாடு குழாய் வழியாக உள்ளே கொடுத்துள்ளனர்.

தினமும் ஒரு பிஸ்கட் பொட்டலம் மற்றும் சகலமும் ஜூஸ் வகைகளை வழங்கியுள்ளனர். இதற்கு முன்பு எந்த திரைப்படத்திற்காகவும் இந்த அளவிற்கு கஷ்டங்களை எதிர்கொண்டிராத விக்ரம், இந்த திரைப்படத்தில் பல வகையான சவாலான செயல்களை செய்துள்ளார்.

அந்தரத்தில் சைக்கிள் பறக்கும் சண்டைக் காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான காட்சிகள் இதுவரை தமிழ் திரையுலகில் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் ‘ஐ’ நம் அனைவரையும் அதிர வைக்கப்போகும் ஒரு திரைப்படமாக இருக்கப்போவது நிச்சயம்.