Home தொழில் நுட்பம் இணைய வர்த்தகத்தில் அமேசானுக்கு சவால் விட காத்திருக்கும் பேஸ்புக்!

இணைய வர்த்தகத்தில் அமேசானுக்கு சவால் விட காத்திருக்கும் பேஸ்புக்!

596
0
SHARE
Ad

is_facebook_dying_கோலாலம்பூர், ஜூலை 21 – உலக அளவில் தொழில்நுட்ப துறையில் அசுர வளர்ச்சி பெற்று இருக்கும் நட்பு ஊடகமான பேஸ்புக், தனது இணைய வலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தயாராகி வருகின்றது.

நவீன மயமாகி வரும் உலகில், பயனர்கள் நேரமின்மையை கருத்தில் கொண்டு தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இணையம் மூலமாகவே வாங்கி வருகின்றனர். இந்த இணைய வர்த்தகத்தில்,  பல நிறுவனங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. அவற்றில் மிக முக்கிய இடத்தை பெற்ற நிறுவனங்களில் ஒன்று அமேசான்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமும் தற்போது இணைய வர்த்தகத்தில் களம் இறங்க உள்ளது. தங்கள் நட்பு ஊடகத்தில் உள்ள பல பில்லியன் பயனர்களுக்கு இந்த சேவையை வழங்குவதன் மூலம் இந்த துறையில் முக்கிய இடத்தை பெறலாம் என்ற நோக்கத்துடன் பேஸ்புக் இந்த இணைய வர்த்தகத்திற்கு தயாராகி வருவதாக வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

தற்போது இதன் முன்னோட்டமாக பேஸ்புக் பக்கத்தில் வரும் விளம்பரங்களில் உள்ள பொருட்களை வாங்குவதற்கு ‘பை பொத்தான்’ (Buy Button) ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனர்கள், குறிப்பிட்ட தளங்கள் பேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் பொருட்களை அந்த பக்கத்தை விட்டு வெளியேறாமலேயே பெற முடியும்.

 இது குறித்து பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” இந்த வசதி, பயனர்களுக்கு புதிய வர்த்தக அனுபவத்தை கொடுக்கும் என நம்புகின்றோம். எங்கள் முக்கிய இலக்கு பயனர்களுக்கு பாதுகாப்பான வர்த்தகத்தை ஏற்படுத்தி தருவது” என்று அறிவித்துள்ளது.

பேஸ்புக்கின் இந்த புதிய முயற்சி, இணைய வர்த்தகத்தில் அந்நிறுவனத்தின்அடுத்த நகர்தலுக்கான முன்னோட்டம் என தொழில்நுட்ப பத்திரிக்கைகளால் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை பேஸ்புக் இணைய வர்த்தகத்தில் தடம் பதிக்குமாயின் அமேசான், அலிபாபா போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.