Home நாடு குவாந்தானில் முதியவரிடம் அடாவடியாக நடந்து கொண்ட கிகிக்கு 5000 ரிங்கிட் அபராதம்!

குவாந்தானில் முதியவரிடம் அடாவடியாக நடந்து கொண்ட கிகிக்கு 5000 ரிங்கிட் அபராதம்!

703
0
SHARE
Ad

THR 1குவாந்தான், ஜூலை 22 -குவாந்தானில் கடந்த வாரம், தன் காரின் மீது எதிர்பாராதவிதமாக தனது காரை மோதிய முதியவர் ஒருவரை நடுரோட்டில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய சிடி ஃபைரா அஷிகின் கமாருடின் (எ) கிகிக்கு அமர்வு நீதிமன்ற இன்று 5000 வெள்ளி அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

அத்துடன், 240 மணி நேரங்கள் அவர் சமூக சேவைகளை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நன்கு படித்தவரான கிகி, தனது நற்பெயருக்கு களங்கள் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸைனல் அபிடின் கமாருடின் நினைவுறுத்தினார்.

#TamilSchoolmychoice

மேலும், குற்றவாளியான கிகி மிகவும் அதிர்ஷ்டசாலி, காரணம் பாதிக்கப்பட்ட சிம் சியாக் ஹோங் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 427 -ன் கீழ் விசாரணை செய்யப்பட்ட பொழுது குற்றத்தை ஒப்புக்கொண்ட கிகி மனம் உடைந்து தனது தவறுக்காக வருந்தினார்.

கடந்த ஜூலை 14 -ம் தேதி, பிற்பகல் 1.10 மணியளவில், குவாந்தான் ஜாலான் செகிலாவில் உள்ள யுடிசி வாகனம் நிறுத்தும் இடத்தில் தான் இந்த குற்றத்தை புரிந்ததாக கிகி ஒப்புக்கொண்டார்.

நடுரோட்டில் சிம் சியாங் ஹோங் என்ற முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், ஸ்டியரிங் பூட்டும் கம்பியால் அவரது காரை அடித்தும் அடாவடித்தனமாக நடந்து கொண்ட கிகியின் செயலை வாகனமோட்டிகளில் ஒருவர் படமெடுத்ததோடு, அதை பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களிலும் பதிவு செய்தார்.

இதனால் கிகியின் செயலுக்கு பலத்த கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.