Home உலகம் தைவான் விமான விபத்து: விமானத்தில் பற்றி எரியும் தீயை அணைக்க கடும் முயற்சி!

தைவான் விமான விபத்து: விமானத்தில் பற்றி எரியும் தீயை அணைக்க கடும் முயற்சி!

553
0
SHARE
Ad

transasia-woman

தைப்பே, ஜூலை 23 – தைவான் நாட்டின் பெங்கு தீவு அருகே டிரான்ஸ் ஏசியா விமானம், விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 58 பயணிகளில் 51 பேர் பலியாகியுள்ளதாகவும் 7 பேர் கடுமையான காயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தைவான் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கௌசியுங் நகரில் இருந்து ஆர்சிப்லாகோ நகருக்கு டிரான்ஸ் ஏசியா என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம்  54 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, மோசமான வானிலையின் காரணமாக மேக்காங் நகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்க முயற்சி செய்த போது விபத்துக்குள்ளானதாக தைவான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“ஒருமுறை அவசரமாக தரையிறங்க முயற்சி செய்து, அது தோல்வியடைந்து மீண்டும் இரண்டாவது முறை தரையிறங்கிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” என்று தைவான் நாட்டின் உள்நாட்டுப் போக்குவரத்துத் துறை தலைவர் சென் சி கூறியுள்ளார்.

மேலும் தற்போது நிலைமை மிகவும் கடினமான ஒன்றாக உள்ளதாகவும், தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருக்கும் விமானத்தை அணைக்க கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் சென் சி குறிப்பிட்டுள்ளார்.