கார்கிவ் (உக்ரேன்), ஜூலை 23 – கிழக்கு உக்ரேன் நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 விமானத்தின் பயணிகளின் சடலங்கள் முழு மரியாதையுடன், உக்ரேன் நாட்டின் கார்கிவ் நகரிலிருந்து விமானம் மூலம் கட்டம் கட்டமாக நெதர்லாந்து கொண்டு செல்லப்படுகின்றன.
மேலே உள்ள படத்தில் கார்கிவ் நகரின் விமான நிலையத்திலிருந்து பயணிகளின் சடலங்கள் தாங்கிய சவப்பெட்டிகள் இராணுவ வீரர்களால் மரியாதையுடன் இன்று விமானத்திற்குள் கொண்டு செல்லப்படும் காட்சியைக் காணலாம்.
எம்எச் 17 விமானப் பேரிடரில் பலியானவர்களின் உடல்கள் சவப் பெட்டிகளில் வைக்கப்பட்டு, நெதர்லாந்து நாட்டின் சி130 ரக விமானத்தில் இன்று ஏற்றப்பட்ட படக் காட்சி.
பயணிகளின் சடலங்கள் நெதர்லாந்து கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கு பலியான பயணிகளை மருத்துவ பரிசோதனைகளின் மூலமாக அடையாளம் காணும் பணிகள் தொடங்கப்படும்.
படங்கள் : EPA
Comments