Home உலகம் அல்ஜீரியா விமானம் 116 பேருடன் மாயம்! தேடும் பணி தீவிரம்!

அல்ஜீரியா விமானம் 116 பேருடன் மாயம்! தேடும் பணி தீவிரம்!

566
0
SHARE
Ad

24-air-algerie-600அல்ஜியர்ஸ், ஜூலை 24 – மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபோசாவின் தலைநகர் அவாகடோகு நகரில் இருந்து 110 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட அல்ஜீரிய நாட்டின் விமான நிறுவனமான ஏர் அல்ஜிரி ஏஎச்5017 விமானம், நடுவானில் ரேடார் தொடர்பில் இருந்து விலகி மாயமானதாக தகவல் வெளிவந்துள்ளது.

விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களுக்குப் பிறகு, நடுவானில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

#TamilSchoolmychoice

 

 

 

Comments