Home உலகம் அல்ஜீரியா விமானம் விழுந்து நொறுங்கியது! 116 பேரின் கதி என்ன?

அல்ஜீரியா விமானம் விழுந்து நொறுங்கியது! 116 பேரின் கதி என்ன?

908
0
SHARE
Ad

air-algerie-792a77f3e2bf1ae4df792a62ae478a98அல்ஜீரியஸ், ஜூலை 24 – 116 பேருடன் மாயமானதாக கூறப்பட்ட ஏர் அல்ஜீரியா விமானம் விழுந்து நொறுங்கியதாக அல்ஜீரியா விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

“நான் உறுதியாகக் கூறுகின்றேன். விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது” என்று அல்ஜீரியாவைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அந்த விமானத்தில் பாதி பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பயணிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

விமானத்தை தேடும் பணியில் இரண்டு பிரான்ஸ் இராணுவ விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பிரான்ஸ் இராணுவம் அறிவித்துள்ளது.