Home நாடு அல்ஜீரிய விமான விபத்தில் மலேசியர்கள் யாருமில்லை – மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவிப்பு

அல்ஜீரிய விமான விபத்தில் மலேசியர்கள் யாருமில்லை – மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவிப்பு

484
0
SHARE
Ad

flightகோலாலம்பூர், ஜூலை 25 – நேற்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் பர்கினா ஃபாசோ நாட்டின் ஒவுகாடவுகாவ் நகரிலிருந்து அல்ஜீரியா நாட்டின் அல்ஜியர்ஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்ற வழியில் விபத்துக்குள்ளான ஏர் அல்ஜிரி விமானத்தில் மலேசியர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை மலேசியர்கள் யாரும் அந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என வெளியுறவு அமைச்சின் செயலாளர் டத்தின் நிர்வாணா ஜலீல் கனி பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.

110 பயணிகளுடனும், 6 பணியாளர்களுடனும் விபத்துக்குள்ளான ஏஎச் 5017 ஏர் அல்ஜீரி விமானத்தில் பயணித்த யாரும் உயிர் பிழைக்கவில்லை.

#TamilSchoolmychoice

மாலி நாட்டின் மீது பறந்து கொண்டிருந்தபோது, அல்ஜீரிய நாட்டின் தென்பகுதி எல்லையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

ஒவுகாடவுகாவ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 50 நிமிடங்களில் விமானம் தனது தொடர்புகளை இழந்தது.

பின்னர் இந்த விமானம்  மாலி நாட்டின் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது என அல்ஜீரிய நாட்டின் வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.