Home உலகம் பிற நாடுகளின் செயற்கைக் கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைக்கோள்!

பிற நாடுகளின் செயற்கைக் கோள்களை உளவு பார்க்கும் அமெரிக்க செயற்கைக்கோள்!

533
0
SHARE
Ad

satelliteBGபுளோரிடா, ஜுலை 30 – சீனா உட்பட பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை உளவு பார்க்க அமெரிக்கா பிரத்யேகமான செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

உலக அளவில் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதும், பிற நாடுகளின் இராணுவம் மற்றும் தொழில்நுட்ப இரகசியங்களை உளவு பார்ப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் அமெரிக்கா, அண்மையில் டெல்டா 4 எனும் ஏவுகணையை புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கேனரவல் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.

63 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏவுகணை யுனைட்டட் ஏலியன்ஸ் மற்றும் லாக்கீட் அண்ட் போயிங் ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டாக சேர்ந்து தயாரித்து இருந்தன.

#TamilSchoolmychoice

satellite2இந்த நவீன செயற்கைக்கோள்களைக் கொண்டு மற்ற நாடுகள் விண்ணில் செலுத்தும் விண்வெளிக்கலங்களையும், அவற்றின் செயல்பாடுகளையும் துல்லியமாக உளவு பார்க்க முடியும் என்றும், அமெரிக்க பிரத்யேகமாக இதனை விண்ணில் செலுத்தி உள்ளது என்றும் கூறப்படுகின்றது.

பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் வளம், வானிலை ஆய்வு, கடல்வளம், கல்வி வளர்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றுக்காக செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா உளவு பார்ப்பதற்காக நவீன செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இருப்பது பிற நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.