Home உலகம் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

581
0
SHARE
Ad

russia-us-flagsநியூயார்க், ஜூலை 31 – அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதிவு செய்யப்பட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி புதிய ஏவுகணை ஒன்றை ரஷ்யா பரிசோதித்து உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.

ரஷ்யா சமீபத்தில் தரையில் இருந்து வானில் சென்று இலக்கைத் தாக்கும் அணுசக்தி ஏவுகணை ஒன்றைப் பரிசோதித்து இருப்பதாகவும் இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே 1987 -ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட அணு ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை ரஷ்யா மீறி செயல்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரஷ்யாவின் இந்த செயல், பனி போராக இருந்து வரும் இரு நாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது ” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதினுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

flag+of+brazil.jpgஇந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் மற்றும் அணு ஆயுத விவகாரங்களில் ரஷ்யாவின் நிலைப்பாடு வருத்தத்தை ஏற்படுத்துகின்றது.

நடைமுறைச் சூழலை உணர்த்துவதற்கு ரஷ்யாவின் ஆயுதக் கொள்கை, நிதிப் பிரிவுகள் போன்றவற்றில்  மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை அதிகப்படுத்துவதற்கான தருணம் வந்துவிட்டதாகவே கருதுகின்றேன்.

தற்போது விதிக்கப்படவுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசியல் நகர்வுகள் ரஷ்யாவுடன் மேலும் ஒரு புதிய பனிப் போரை ஏற்படுத்தும் என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை”  என்று தெரிவித்துள்ளார்.