சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘காக்கி சட்டை’ படத்தை இயக்கி வருகிறார் துரை.செந்தில்குமார். தனுஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது. “காக்கிச் சட்டைப்” படத்தைத் தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இயக்குநர் பொன்ராம் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப்படத்திற்கு ரஜினிமுருகன் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சூரி, ராஜ்கிரண், ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தில் வில்லனாக வருகிறாராம் சமுத்திரகனி. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பின்னர் சமுத்திரகனி ஏற்க உள்ள வித்தியாசமான வில்லன் கதாபாத்திரம் இது என்கின்றனர்.
‘அஞ்சான்’ படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவிடம், ‘ரஜினி முருகன்’ நாயகி வேடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.
சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி என பலமான கூட்டணியோடு உருவாகும் படம் என்பதால் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.