Home உலகம் தைவானில் எரிவாயு குழாய் வெடித்து 22 பேர் பலி! 270 பேர் படுகாயம்! (படங்களுடன்)

தைவானில் எரிவாயு குழாய் வெடித்து 22 பேர் பலி! 270 பேர் படுகாயம்! (படங்களுடன்)

641
0
SHARE
Ad

Taiwan underground explosions leaves at least 22 dead, 270 injuredதைவான், ஆகஸ்ட் 1 – தைவான் நாட்டின் கோசிங் நகரத்தில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாயினர். 270 பேர் படுகாயங்களுடன்  மீட்கபட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Taiwan underground explosions leaves at least 24 dead, 271 injuredதைவான் நகரின் மையத்தில் சாலையின் நடுவே நிலத்தடியில் பல்வேறு பெட்ரோலிய நிறுவனங்கள் குழாய்களை புதைத்து எரிவாயுவை எடுத்து செல்கின்றனர்.

Taiwan underground explosions leaves at least 24 dead, 271 injuredஅந்த குழாய்கல் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தீ பற்றியது. இதனால் சாலையோரத்தில் இருந்த சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலையில் சென்ற வாகனங்களும் விபத்துக்குள்ளாயின. தீ மற்றும் இடிபாடுகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

Taiwan underground explosions leaves at least 22 dead, 270 injuredமீட்பு பணிகளை கோசிங் நகர நிர்வாகம் முடிக்கிவிட்ட நிலையில் அந்நகரத்திற்கு நிலத்தடி குழாய் மூலம் கொண்டு செல்லப்படும் எரிவாயு விநியோகத்தை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Taiwan underground explosions leaves at least 23 dead, 271 injuredகாயமடைந்த 270 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ராணுவத்தினர் மற்றும் மீட்பு குழுவினர் 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.