டோனாட்ஸ்க் (உக்ரேன்) ஆகஸ்ட் 3 – எம்எச் 17 விமானப் பேரிடர் நிகழ்ந்த இடத்திலிருந்து மேலும் கூடுதலான பயணிகளின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. அனைத்துலக புலனாய்வுக் குழுவினர் நேற்று விமானம் விழுந்த இடத்தை அடைந்து தங்களின் ஆய்வுப் பணிகளைத் தொடர்வதிலும், சடல மீட்புப் பணிகளை மேற்கொள்வதிலும் வெற்றி கண்டுள்ளனர்.
அதே வேளையில் உக்ரேன் இராணுவத்தினரும், ரஷிய ஆதரவு பெற்ற பிரிவினைவாதக் குழுவினரும் வெவ்வேறு இடங்களில் தங்களின் ஆயுதப் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.
ஒஎஸ்சிஇ எனப்படும் ஐரோப்பாவுக்கான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பைச் (OSCE) சேர்ந்த புலனாய்வுக் குழுவினர், டோனாட்ஸ்க் நகரிலிருந்து புறப்பட்டு, விமானப் பேரிடர் நிகழ்ந்த கிழக்கு உக்ரேன் பிரதேசத்திற்கு கார்களில் செல்லும் காட்சி.
ஓஎஸ்சிஇ அமைப்பின் புலனாய்வுக் குழுவின் துணை தலைமை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் ஹக் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு எம்எச் 17 பயணிகளின் சடலங்களை மீட்கும் பணிகள் குறித்து விளக்கமளிக்கின்றார்.
டோனாட்ஸ்க் நகருக்கும் விமானம் விழுந்த இடத்திற்கும் இடையில் உள்ள பகுதியில் காவலுக்கு நிற்கும் ரஷிய சார்பு பிரிவினைவாதப் போராட்டவாதிகளின் மேற்பார்வையில் புலனாய்வுக் குழுவினரின் வாகனங்கள் விமானம் விழுந்த பகுதிக்குள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
படங்கள்: EPA