அறிமுகப் படங்களில் குடும்ப குத்துவிளக்காகத் தோன்றிய நடிகை அஞ்சலி, சமீபகாலமாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் சிங்கம் -2 படத்தில் கூட ஒரு பாடலுக்குத் தோன்றி கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் அஞ்சலி.
இடையில் கொஞ்சகாலம் தனிப்பட்ட சில பிரச்சனைகளால் சினிமாவை விட்டு விலகியிருந்த அஞ்சலி தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது ‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் தாராள ஆடை குறைப்புடன் நடித்து வருகிறாராம் அஞ்சலி.
இதனால், அடுத்து கவர்ச்சி நடிகை “ஷகிலா”வின் வாழ்க்கையை படமாக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். இதில் ஷகிலா வேடத்தில் அஞ்சலி நடிக்கப் போவதாக செய்திகள் பரவியுள்ளன.
சமீபகாலமாக அஞ்சலி கவர்ச்சியாக தோன்றுவதாலேயே, அவரை ஷகிலா வேடத்துக்கு தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அஞ்சலி தான் அடுத்த “சில்க் ஸ்மிதா” என தெலுங்குப்பட இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அஞ்சலி மட்டும் குத்தாட்ட நடிகையாக மாறினால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்” எனப் புகழ்ந்துள்ளார். ஆனால், இயக்குநரின் பேச்சை ரசிக்காத அஞ்சலி, சில்க்ஸ்மிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதால் கோபமாகி அவ்விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டாராம்.