சிங்கப்பூர், ஆகஸ்ட் 10 – சிங்கப்பூர் நேற்று 49வது தேசிய தின விழாவை கோலாகலமாகக் கொண்டாடியது. வாண வேடிக்கைகளையும், அலங்கார ஊர்வலங்களையும் காண சிங்கப்பூரின் மெரினா பே என்ற பகுதியில் சிங்கப்பூரியர்களும், சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் குவிந்தனர்.
சிங்கப்பூரின் தேசிய தினக் கொண்டாட்டங்களின் வண்ணமயமான சில படக்காட்சிகளை இங்கே காணலாம்:
சிங்கப்பூர் மெரினா பே சேண்ட்ஸ் ஸ்கைபார்க் (Marina Bay Sands skypark) கட்டிடத்தின் கூரையில் சிங்கப்பூரின் கொடி சின்னம் விளக்கொளியில் காட்டப்படும் காட்சி
வாண வேடிக்கைக் காட்சிகள்…
மெரினா பே பகுதியில் நடத்தப்பட்ட வாண வேடிக்கையின் வண்ணமயமான காட்சி
“சிவப்பு சிங்கங்கள்” என்று பெயர் சூட்டப்பட்ட வான்குடை வீரர்கள் வண்ணப் புகைகளை வெளியிட்டுக்கொண்டு சாகசம் செய்த காட்சி…
வானளாவிய கட்டிடங்களுக்கு இடையில் வான் குடை சாகசம் நிகழ்த்தும் வான்குடை வீரர் ஒருவர்….
வாண வேடிக்கைக் காட்சிகளை மகிழ்ச்சியோடு கண்டு மகிழும் பொதுமக்கள்…
படங்கள் : EPA