Home தொழில் நுட்பம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வரும் பேஸ்புக் மெசஞ்சர் (அஞ்சல்) செயலி! 

எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வரும் பேஸ்புக் மெசஞ்சர் (அஞ்சல்) செயலி! 

536
0
SHARE
Ad

Facebook-MessengerLargeகோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – ஒரு செயலியின் மூலம் நம்மை அறியாமலேயே நமது திறன்பேசிகளின் தகவல்களை பிறரால் இயக்க முடியும் என்றால் அத்தகைய செயலி பாதுகாப்பானதா? பெரும்பாலான பயனர்கள் “இல்லை” என்றே கூறுவார்கள். ஆனால் நம்பகத்தன்மை வாய்ந்த நட்பு ஊடகமான பேஸ்புக் தான் அத்தகைய செயலியை உருவாக்கி உள்ளது என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பேஸ்புக் பயனர்களிடத்தில் விரைவில் கட்டாயமாகப் போகும் பேஸ்புக் அஞ்சல் (மெசெஞ்ஜர்) செயலி தான், அது போன்ற அச்சுறுத்தும் விதிமுறைகளையும், வசதிகளையும் கொண்டுள்ளது. ஐரோப்பா உட்பட மேற்கத்திய நாடுகளில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பேஸ்புக் அஞ்சல் செயலியை பயனர்கள் கூகுள் ஸ்டோர் மற்றும் ஐட்யூன் மூலமாக பதிவிறக்கம் செய்த போது, திறன்பேசிகளின் அனைத்து அம்சங்களையும் அந்த செயலி கட்டுப்படுத்துவதை பயனர்களால் உணர முடிந்தது.

பயனர்களின் தனிமை ஊடுருவுவதாக அந்த செயலி உள்ளது.

#TamilSchoolmychoice

பேஸ்புக் அஞ்சல் செயலியை பயனர்களின் திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்து அதனை செயல்படுத்திய உடன், நமது கேமரா உட்பட அனைத்து தனித்த அம்சங்களையும் நமது நட்பு வட்டத்தில் உள்ள பிறர் உபயோகப்படுத்தி கொள்வதற்கான வசதிகளை இந்த செயலி ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.

ஐட்யூன் மதிப்பீடுகளில் மிகவும் பின்தங்கி உள்ள இந்த செயலி  பெரும்பான்மையாக ஒற்றை நட்சத்திர குறியீடு மதிப்பினையே பெற்றுள்ளது.

பல பயனர்கள் பேஸ்புக்கின் விமர்சனப் பக்கத்தில் இந்த அஞ்சல் செயலியினை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பயனர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள பேஸ்புக், “பயனர்களின் தகவல் பரிமாற்றத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போகவே இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும். அதன் சிறப்பான செயல்பாட்டை உணர்ந்து கொள்ள சில காலம் பிடிக்கும்” என்று கூறியுள்ளது.