Home நாடு சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம்: காலிட் சுல்தானை சந்தித்தார்!

சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம்: காலிட் சுல்தானை சந்தித்தார்!

490
0
SHARE
Ad

Kalidhகோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் தனது மந்திரி பெசார் பதவி குறித்து கலந்தாலோக்க இன்று சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதின் இட்ரிஸ் ஷாவை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தை கலைப்பதா அல்லது மாநில பிரதிநிதிகளிடையே காலிட் தனது ஆதரவை தீர்மானிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதா என்பதை அரண்மனை தான் முடிவெடுக்கும் என்று கூறப்படுகின்றது.

சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகும் படி டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமுக்கு பிகேஆர் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், அவர் தொடர்ந்து பதவி விலக மறுத்து வந்ததால், கடந்த சனிக்கிழமையன்று காலிட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு எதிராக காலிட் நடந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் டத்தோ டாக்டர் டான் கீ க்வோங் தெரிவித்தார்.

இந்நிலையில், தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாக காலிட் தெரிவித்துள்ளார்.

“என்னுடைய குறிக்கோள் மந்திரி பெசாராக இருப்பது தான். மாநிலத்தில் செயலாற்ற வேண்டும்” என்று காலிட் நேற்று தெரிவித்தார்.

இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தும், காலிட் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அனுப்பியுள்ளார்.

“பிறந்தநாள் வாழ்த்துகள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். உருமாற்றத்தையும், மக்களுக்காக போராடுவதையும் செயல்படுத்த நீங்கள் நீண்ட காலம் வாழ வாழ்த்துகின்றேன். நன்றி” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் காலிட் தெரிவித்துள்ளார்.