Home நாடு சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம்: 2 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் காலிட்!

சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம்: 2 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் காலிட்!

570
0
SHARE
Ad

khalidibrahimகோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – தனது மந்திரி பெசார் பதவி விவகாரம் தொடர்பாக இன்று சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதின் இட்ரிஸ் ஷாவை சந்தித்த டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம், சுல்தானுடனான சந்திப்பு மிகவும் திருப்தியாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.

எனினும், சந்திப்பில் பேசிய விவகாரங்கள் குறித்து விரிவாகக் கூற மறுத்துவிட்டார்.

இந்நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் அவசர செய்தியாளர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சுல்தானுடனான சந்திப்பில் பேசிய விஷயங்கள் குறித்து பொதுவில் காலிட் பகிர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

 

Comments