Home உலகம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சிக்கு ஒபாமா தான் காரணம் – ஹிலாரி கிளிண்டன்!

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சிக்கு ஒபாமா தான் காரணம் – ஹிலாரி கிளிண்டன்!

575
0
SHARE
Ad

Hillary-Clintonநியூயார்க், ஆகஸ்ட் 12 – ஈராக் மற்றும் சிரியாவில் எழுச்சியடைந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தற்போதைய நிலைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத் திறன் இன்மையே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் “அட்லாண்டிக்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது, அமெரிக்கா அதனை கண்டு கொள்ளவில்லை. இது மாபெரும் தவறாகும்.

நம்பகத்தன்மை, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளை கொண்டுள்ள கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுத உதவி செய்து அவர்களை திறன் வாய்ந்த போராட்ட சக்தியாக உருவாக்கியிருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

barack-obamaஅவ்வாறான் முயற்சிகளை அமெரிக்கா கடைபிடிக்காததால், அந்த இடத்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நிரப்பிக்கொண்டது”. “சிரியாவில் முதன் முதலில் போராட்டத்தை தொடங்கிய மதச் சார்பற்ற குழுக்களின் கரங்களை அமெரிக்கா வலுப்படுத்தப்படுத்த தவறிவிட்டது. அதனைப் பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள் தங்கள் கைகளை மேலோங்கிவிட்டனர்.

தற்போது இதே நிலை ஈராக்கிலும் நடை பெற்று வருகின்றது” என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.