Home நாடு காலிட்டின் முன்னாள் அரசியல் செயலாளர் ஃபைக்கா பிகேஆர் கட்சியிலிருந்து விலகினார்!

காலிட்டின் முன்னாள் அரசியல் செயலாளர் ஃபைக்கா பிகேஆர் கட்சியிலிருந்து விலகினார்!

475
0
SHARE
Ad

faekah-bestஷா ஆலம், ஆகஸ்ட் 12 – சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமின் முன்னாள் அரசியல் செயலாளரான ஃபைக்கா ஹூசைன் தான் பிகேஆர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சியின் மீது நம்பிக்கை இழந்ததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஃபைக்கா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1999 -ம் ஆண்டிலிருந்து தான் ஆதரவு தெரிவித்து வரும் பிகேஆர் கட்சி, தற்போது சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி விவகாரத்திலும், அதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனையையும் கையாளும் முறை, கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக உள்ளதாக ஃபைக்கா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தனது ராஜினாமா கடிதத்தையும் பிகேஆர் தலையகத்திற்கு தான் அனுப்பிவிட்டதாகவும், அதில் காலிட் இப்ராகிமுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, பிகேஆர் பின்பற்றி வந்த நீதிக்கு எதிராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதாகவும் ஃபைக்கா தெரிவித்துள்ளார்.