Home நாடு “இனி காலிட்டை சந்திக்கப்போவதில்லை” – சிலாங்கூர் பிகேஆர், ஜசெக செயற்குழு அறிவிப்பு!

“இனி காலிட்டை சந்திக்கப்போவதில்லை” – சிலாங்கூர் பிகேஆர், ஜசெக செயற்குழு அறிவிப்பு!

878
0
SHARE
Ad
Selangor

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – வாராந்திர மாநில செயற்குழு கூட்டத்தைத் தவிர மற்ற கூட்டங்களில் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இம்ராகிமை தவிர்க்கப் போவதாக சிலாங்கூர் மாநில பிகேஆர் மற்றும் ஜசெக செயற்குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து 6 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் குழு இன்று மதியம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “பிகேஆர் மற்றும் ஜசெக கட்சியைச் சேர்ந்த மத்திய செயற்குழு உறுப்பினர்கள் வாராந்திர செயற்குழு கூட்டத்தைத் தவிர மற்ற விவாதங்களில் காலிட் இப்ராகிமை சந்திக்கப் போவதில்லை” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த அறிக்கையில் ஜசெக கட்சியின் டெங் சாங் கிம், வி.கணபதிராவ், இயான் வோங் ஹியான் வா மற்றும் பிகேஆர் கட்சியின் ரோட்ஸியா இஸ்மாயில், எலிசபெத் வோங் மற்றும் டாரோயா ஆல்வி ஆகியோர் கையெழுத்திட்டனர்.