Home நாடு தியான் சுவா மீது குற்றவியல் சட்டம் பிரிவு 509-ன் கீழ் வழக்கு!

தியான் சுவா மீது குற்றவியல் சட்டம் பிரிவு 509-ன் கீழ் வழக்கு!

589
0
SHARE
Ad

tian-chuaகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – காவல்துறை அதிகாரி ஒருவரிடம் தகாத வார்த்தைகளை பேசி அவரது தன்மானத்திற்கு இழுக்கு விளைவித்தார் என பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.

கிளென் ஏ.சின்னப்பா என்ற காவல்துறை அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக இன்று காலை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அமர்வு நீதிமன்றத்தில் தியான் சுவா மீது குற்றவியல் சட்டம் பிரிவு 509 -ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஏப்ரல் 14 -ம் தேதி, அர்மடா தங்கும் விடுதியில், காவல்துறை சோதனை மேற்கொண்ட போது, காவல்துறையின் செயலுக்கு தடையாக இருந்ததோடு, அதிகாரியை தகாத வார்த்தைகளால் தியான் சுவா திட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

வழக்கமாக, பெண்களை பாலியல் வன்முறை செய்தவர்கள் மீது தான் பிரிவு 509 -ன் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று தியான் சுவா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 வருட சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.