Home நாடு எம்எச்17 பேரிடர்: அடையாளம் காணப்பட்ட 16 சடலங்களில் விமானப் பணியாளரும் ஒருவர்!

எம்எச்17 பேரிடர்: அடையாளம் காணப்பட்ட 16 சடலங்களில் விமானப் பணியாளரும் ஒருவர்!

517
0
SHARE
Ad

firdausகோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளின் சடலங்களில் அடையாளம் காணப்பட்ட 16 பேரில், முதல்நிலை விமானப் பணியாளர் முகமட் ஃபிர்டவுஸ் அப்துல் ராஹிமும் ஒருவர் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து முகமட் ஃபிர்டவுசின்  உறவினர் கூறுகையில், ஷாஆலமில் உள்ள அவரது தாய்க்கும், மூத்த சகோதரிக்கும் மாஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவார்கள் என்று தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

“முகமட் ஃபிர்டவுசின் குடும்பத்தினர் இன்னும் அவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அதே வேளையில் அவரது உடல் என்ன நிலையில் உள்ளது என்றும் அவர்களுக்கு தெரியாது. உடல் கிடைத்தவுடன், பேராக் தெலுக் இந்தானிலுள்ள அவரது தந்தையின் சமாதிக்கு அருகில் புதைக்கப்படும்” என்றும் அந்த உறவினர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice