Home இந்தியா இந்திய டீ தூளில் நச்சுப்பொருட்களா? பகீர் தகவல்!

இந்திய டீ தூளில் நச்சுப்பொருட்களா? பகீர் தகவல்!

475
0
SHARE
Ad

tige-bambou-namringடெல்லி, ஆகஸ்ட் 14 – இந்தியாவில் உற்பத்தியாகும் பெரும்பாலான தேயிலை தூளில் உயிரைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக ‘க்ரீன் பீஸ்’ என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தியாளர்களில் ஒன்றான இந்தியாவின் தேயிலை உற்பத்தி முறை குறித்து சுமத்தப்பட்டுள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிரீன் பீஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தேயிலை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

tea,இதில் 46 மாதிரிகளில் பூச்சிக்கொல்லியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

குறிப்பாக சுவாச உறுத்தலை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லியான சைபர்மெத்ரின் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்கத்திலும் வளர்ச்சியிலும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லியான இமிடாக்லோப்ரிட் உள்ளிட்டவை அந்த தேயிலை தூள்களில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

articleஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த இந்திய தேயிலை வாரியம், பரிசோதிக்கப்பட்ட அனைத்து தேயிலை தூள் மாதிரிகளும், இந்திய சட்ட விதிகளை பின்பற்றியே உற்பத்தி செய்யப்பட்டதாகவும், நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் தான் அவை இருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.