தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான ஆப்பிள், அவ்வபோது உலக சுற்றுச் சூழல் குறித்த எச்சரிக்கைகளிலும், அறிவிப்புகளிலும் மிகுந்த அக்கறை காட்டி வருவது வாடிக்கை.
அதேபோல் நிறுவன தயாரிப்புகளால் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் எத்தகைய பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் அதிக அக்கறை கொண்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக ஆப்பிள் கணினிகளின் தயாரிப்பில் ‘பென்சேன்’ (benzene) மற்றும் ‘என்-ஹெக்சேன்’ (n-hexane) பயன்படுத்தி வருவதாக பெரும் சர்ச்சையை ஏற்பட்டு வந்தது.
இது பற்றி அந்நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் துணைத்தலைவர் லிசா ஜாக்சன் கூறுகையில், “சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் எங்களின் தலைமைப் பண்பை காட்ட இது சரியான தருணம். இனி கணினிகளின் தயாரிப்பில் பாதுகாப்பான இரசாயனங்களே பயன்படுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.