Home இந்தியா இந்தியா முழுவதும் சிகரெட், புகையிலைக்குத் முழு தடை – உச்ச நீதிமன்றம் அறிக்கை!

இந்தியா முழுவதும் சிகரெட், புகையிலைக்குத் முழு தடை – உச்ச நீதிமன்றம் அறிக்கை!

475
0
SHARE
Ad

indiaபுதுடெல்லி, ஆகஸ்ட் 15 – சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு, இந்தியா முழுவதும் முற்றிலும் தடை விதிப்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிக்கை அனுப்ப நேற்று உத்தரவிட்டது.

சிகரெட், புகையிலைப் பொருட்களுக்கு, நாடு முழுவதும் முற்றிலும் தடை விதிக்கக் கோரி சினிமா தயாரிப்பாளர் சுனில் ராஜ்பால், உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு முன்பாக, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜ்பால் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஆதித்யா அகர்வால், புகைபிடிப்பதால் உண்டாகும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

எனவே சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு இந்தியா முழுவதும் முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றது.

6770மேலும், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை விதிப்பது குறித்து, பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டது.

* கல்வி நிலையங்களுக்கு அருகேயும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

* கடந்த 2008 அக்டோபர் 2-ம் தேதி முதல் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், அதையும் மீறி ஏராளமானோர் பொது இடங்களில் புகை பிடித்து, மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.

* உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, உலகில் புகை பிடிப்பவர்களில் 12 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர்.

* புகைப்பழக்கத்தால் உண்டாகும் பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.