Home உலகம் விரைவில் அணு ஆயுதப் போர் – வட கொரியா எச்சரிக்கை!

விரைவில் அணு ஆயுதப் போர் – வட கொரியா எச்சரிக்கை!

608
0
SHARE
Ad

South Koreaசியோல், ஆகஸ்ட் 18 – அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே இன்று தொடங்கும் இராணுவக் கூட்டுப் பயிற்சிக்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அணுஆயுதப் போர் எப்பொழுது வேண்டுமானாலும் தொடங்கலாம் என உலக நாடுகளை எச்சரித்துள்ளது.

எதிர் எதிர் துருவங்களான வட கொரியாவும், தென் கொரியாவும் தங்கள் இராணுவ பலங்களைப் வெளிக்காட்டிக் கொள்ள, அவ்வபோது இரு நாட்டு எல்லைகளில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வந்தன. இந்நிலையில், தென் கொரியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா, அந்நாட்டுடன் கூட்டு இராணுவப் பயிற்சியை ஏற்படுத்திக் கொண்டது. அமெரிக்காவின் இந்த போக்கினை கடுமையாக எச்சரித்த வட கொரியா அந்நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்த தயங்கமாட்டோம் எனக் கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று அமெரிக்கா மற்றும் தென் கொரியா தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்க உள்ளன. இது குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரியா, “அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கூட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். இந்த கூட்டுப்பயிற்சியை இரு நாடுகளும் திரும்பப் பெற வேண்டும்” என்று கோரியது. ஆனால் வட கொரியாவின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ள வட கொரியா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“அமெரிக்கா, தென்கொரியா கூட்டு இராணுவப்பயிற்சி, அணு ஆயுதப்போருக்கான முதல் ஒத்திகை. இதனை சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். எந்த நேரத்திலும் ஈவிரக்கமின்றி கடுமையான தாக்குதல்களை அமெரிக்க–தென்கொரிய கூட்டுப்படைகள் சந்திக்க நேரிடும்” என உறுதிபடத்  தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இந்த எச்சரிக்கை அணுஆயுதப் போருக்கான முதல் படியாக இருக்கலாம் என நடுநிலையாளர்களால் நம்பப்படுகின்றது.