இந்த பதவிக்கு வான் அசிசா பொருத்தமானவர் இல்லை என அரண்மனையில் இருந்து வந்த தகவலையடுத்து பாஸ் கட்சி அஸ்மின் அலியின் பெயரை பரிந்துரைத்துள்ளதாக சிலாங்கூர் பாஸ் கட்சியின் துணை ஆணையர் சாலேஹின் முக்யி தெரிவித்துள்ளார்.
“ஆனால் பக்காத்தான் தலைவர்கள் அசிசா தான் பதவி ஏற்க வேண்டும் என்று ஒரு மனதாக விரும்பினால், அதற்கு அரண்மனை அனுமதி வழங்கினால், நாங்கள் அசிசாவுடன் இணைந்து பணியாற்றுவோம்” என்று மாநில செயற்குழு உறுப்பினருமான சாலேஹின் தெரிவித்தார்.
இதனிடையே சிலாங்கூர் சுல்தான் நாடு திரும்பும் வரை காலிட் இப்ராகிம் பதவி விலகத் தேவையில்லை என்றும் சாலேஹின் குறிப்பிட்டுள்ளார்.
காலிட் மந்திரி பெசாராக தொடர்வதற்கு தாங்கள் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என பாஸ் மத்திய செயற்குழு நேற்று முடிவெடுத்தது.
அதே வேளையில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் பெயரையும் மந்திரி பெசார் பதவிக்கு முன்மொழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.