Home உலகம் பதவி விலக நவாஸ் ஷெரீபுக்கு போராட்ட தலைவர்கள் கெடு!

பதவி விலக நவாஸ் ஷெரீபுக்கு போராட்ட தலைவர்கள் கெடு!

578
0
SHARE
Ad

nawazஇஸ்லாமாபாத், ஆகஸ்ட் 18 – பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தாரீக்,இ,இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் மதத் தலைவரும் பாகிஸ்தான் ஆவாமி தாரிக் அமைப்பின் தலைவருமான தாகிருல் காத்ரி கோரி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினர். இஸ்லாமாபாத்துக்குள் நுழைந்த அவர்கள், நகருக்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.

இதனிடையில் இன்று மாலைக்குள் பதவி விலக வேண்டும் என்று இருவரும் ஷெரீபுக்கு கெடு விதித்துள்ளனர். அவ்வாறு விலகாவிட்டால், நாடாளுமன்றம், முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பாதுகாப்பு மிகுந்த பகுதிக்குள் நுழைந்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இதனால், பதற்றம் நிலவுகிறது. இஸ்லாமாபாத் நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் ராணுவத்தினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இம்ரான் கட்சியினருக்கும் நவாஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை தவிர்ப்பதற்கு இல்லை என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.