ஆர்ப்பாட்டம் நடத்திய குழுவின் சார்பில் பேசிய முகமட் கமால் ஹாஸ்பி என்பவர் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் மாநிலத்தின் மந்திரி பெசாராக வரவேண்டும் எனக் கூறினார்.
வான் அசிசா சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல என்ற காரணத்தால் அவரது நியமனத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்றும் அவர் மேலும் கூறினார்.
மந்திரி பெசாராக இரண்டு தவணைகள் இருந்த டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிமின் தலைமைத்துவத்தால் சிலாங்கூர் மாநிலம் நாட்டிலேயே மிகவும் மேம்பாடடைந்த மாநிலமாக முன்னேறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நலன் விரும்பும் ஒரு தலைவராக, போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினரான காலிட் இப்ராகிம் விளங்கினார் என்றும் மாநிலத்தை மேம்படுத்த நிறைய முயற்சிகள் எடுத்தார் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் முகமட் கமால் கூறினார்.
இதற்கிடையில் வெளிநாடு சென்றுள்ள சிலாங்கூர் சுல்தான் தான் நாடு திரும்பும் வரை எந்தவித முடிவுகளும் எடுக்க வேண்டாம் என காலிட் இப்ராகிமிற்கு கட்டளையிட்டுள்ளார்.
-பெர்னாமா