Home வணிகம்/தொழில் நுட்பம் மெர்சிடிஸ் பென்ஸ் மீது சீனா குற்றச்சாட்டு!

மெர்சிடிஸ் பென்ஸ் மீது சீனா குற்றச்சாட்டு!

569
0
SHARE
Ad

Mercedes Benz Logo

பெய்ஜிங், ஆகஸ்ட் 19 – உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ்‘ (Mercedes Benz) மீது சீன அரசு ஊடகம்போலி விலைநிர்ணயம் செய்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் சீனாவில் தனது கிளைகளை பல வருடங்களாக வெற்றிகரமாக இயக்கி வருகின்றது. இந்நிலையில் சீன அரசு ஊடகம் ஒன்று பென்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதன்படி, “சீனாவில் மெர்சிடிஸ் நிறுவனம் உதிரிப்பாகங்களின் விலைகளை போலியாக நிர்ணயம் செய்துள்ளது. இதனை அறிந்த ஜியாங்ஸு மாகாண மோட்டார் வாகன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, பென்ஸ் நிறுவனம் போலியான விலைகளில் உதிரி பாகங்கள் விற்பது கண்டறியப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளது.

இதேபோல் மற்றொரு புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW)-ன் சீன விற்பனையாளர்கள் மீது கடந்த வாரம் இரண்டரை லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி கார் தயாரிப்பு நிறுவனங்களின் வர்த்தகர்கள் கூறுகையில், “பன்னாட்டுக் கார் தயாரிப்பு நிறுவனங்கள், வியாபாரத்தில் நிலையான ஆதிக்கத்தையும், ஆளுமையையும் செலுத்தி வருவதை சீன அரசு விரும்பவில்லை. இதனைத் தடுக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் பெரிய நிறுவனங்களைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றது. தற்போதய நிலையில் ‘ஆடி(Audi), ‘கிரைஸ்லர் (Chrysler) உள்ளிட்ட கார் நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகின்றது” என்று கூறியுள்ளனர்.

சீனாவில் பன்னாட்டு வியாபாரங்களை செயல்படுத்தி வரும் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக குற்றம் சாட்டப்படுவது, இலக்காக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஐரோப்பிய ஒன்றியம் கவலை அடைந்துள்ளது. எனினும், தங்கள் அரசு அத்தகைய பாரபட்ச நடவடிக்கைகளை எடுப்பதில்லை என சீன அரசு தெரிவித்துள்ளது.