Home கலை உலகம் ஆர்யாவின் ‘மீகாமன்’ படத்தால் கதறி அழுத ஹன்சிகா!

ஆர்யாவின் ‘மீகாமன்’ படத்தால் கதறி அழுத ஹன்சிகா!

624
0
SHARE
Ad

Hansika Motwani Cute Wallpapersசென்னை, ஆகஸ்ட் 19 – ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘மீகாமன்’ படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை எடுத்து முடித்ததும் வாய்விட்டு அழுதபடியே படப்பிடிப்பு அரங்கில் இருந்த அறைக்குள் ஓடிவிட்டாராம் ஹன்சிகா.

இதுவரை நடித்த படங்களைவிட அதிக கவர்ச்சியாக நடிக்கணும் என்று கூட கேட்டுப் பாருங்கள், ‘அதுக்கென்ன, செஞ்சுட்டா போச்சு’ என்பார் ஹன்சிகா.

ஆனால் கடாநாயகர்களிட்டம் ரொம்……ம்ப நெருங்கி நடிக்க வேண்டும் என்றால் மட்டும் ஒப்புக்கொள்ளமாட்டாராம். ‘சேச்சே… என்னோட வாழ்க்கை என்னாவறது?’ என்றுதான் கேட்பாராம்.

#TamilSchoolmychoice

Hansika-Motwani‘மீகாமன்’ படத்தில் நெருங்கி நடிக்கும் ஒரு காட்சியில் நடிக்கவே முடியாது என்று கூறிவிட்டாராம். இருந்தாலும் “ஆர்யா ரொம்ப நெருங்கி வரமாட்டார். காட்சியை கவித்துவமாக, துளியும் ஆபாசமே இல்லாமல் எடுப்போம்,” என்று சொல்லிச் சொல்லியே நடிக்க வைத்துவிட்டார்கள்.

குறிப்பிட்ட சில காட்சிகளை எடுத்து முடித்ததும் வாய்விட்டு அழுதபடியே படப்பிடிப்பு அரங்கில் இருந்த அறைக்குள் ஓடி புகுந்துகொண்டாராம் ஹன்சிகா. ‘படம் வெளியாவதற்கு முன்னாடி எனக்கு காண்பிக்கணும். நான் சரி சொன்னாதான் வெளியிடனும் என்று இப்போது கூறியிருக்கிறாராம் ஹன்சிகா.