டெல்லி, ஆகஸ்ட் 20 – காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை அளிக்க முடியாது என்று நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.
இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தியாளரிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது. “மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 55 இடங்களிலாவது ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் அத்தனை இடங்களை காங்கிரஸ் கட்சி பெறாததால், எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க முடியாத நிலையில் இருக்கிறேன் என்று காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் வாயிலாகத் தெரிவித்து விட்டேன்’ என்றார் சுமித்ரா மகாஜன்.
சுமித்ரா மகாஜனின் முடிவு குறித்து மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்,” இதுவரை சுமித்ரா மகாஜனின் கடிதத்தை நான் படிக்கவில்லை.
அந்தக் கடிதத்தில், எந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்பதை படித்தபிறகு எனது பதிலை தெரிவிப்பேன்’ என்றார்.