Home நாடு எம்எச்17 இறுதி அஞ்சலி: 20 மலேசியப் பயணிகளின் பட்டியல் வெளியீடு!

எம்எச்17 இறுதி அஞ்சலி: 20 மலேசியப் பயணிகளின் பட்டியல் வெளியீடு!

641
0
SHARE
Ad

செப்பாங், ஆகஸ்ட் 21 -எம்எச்17 பேரிடரில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் நாளை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.

அந்த 20 பயணிகளின் பெயர் பட்டியலை தற்போது அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள இறுதி அஞ்சலி நிகழ்வின் ஒத்திகைகள் நிறைவடைந்தவுடன், செய்தியாளர்களிடம் பேசிய தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் இந்த அறிவிப்பை செய்தார்.

#TamilSchoolmychoice

இந்த அறிவிப்பை வெளியிடும் போது ஹிஷாமுடினுடன் போக்குவரத்துத் துறை டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாயும் உடன் இருந்தார்.

இதனிடையே, நேற்று 30 மலேசியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லியாவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அந்த பட்டியலின் படத்தை கீழே காணலாம்:-

ListMH17