Home நாடு எம்எச்17 துக்க தினம்: சிறப்பு விமானம் கேஎல்ஐஏ -வை அடைந்தது!

எம்எச்17 துக்க தினம்: சிறப்பு விமானம் கேஎல்ஐஏ -வை அடைந்தது!

519
0
SHARE
Ad

flightarrivesசெப்பாங், ஆகஸ்ட் 22 –  எம்எச் 17 பேரிடரில் பலியான மலேசியர்களில் 20 பேரில் சடலங்கள் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த 20 பயணிகளின் சடலங்களுக்கு இறுதி அஞ்சலி நடத்த ஒட்டுமொத்த மலேசியாவும் காத்திருக்கிறது.

இந்த துக்க தினத்தை அனுசரிக்கும் விதமாக காலை 5.45 மணியளவில் அங்கு கூடிய அனைத்து ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்களும் கருப்பு உடை அல்லது சற்று மங்கலான நிறம் உடைய சட்டை அணிந்திருந்தனர்.

இன்று காலை 10.30 மணியில் இருந்து 11.15 மணிக்குள் மலேசியர்கள் அனைவரும் பலியான பயணிகளுக்காக 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று இரவு ஆம்ஸ்டெர்டாமில் இருந்து 9.40 மணியளவில் புறப்பட்ட சிறப்பு விமானம், இன்று காலை 9.55 மணியளவில் கோலாலம்பூரை அடைந்தது.