Home அரசியல் மக்கள் கூட்டணியில் பாஸ் கட்சிக்கு முக்கியத்துவம் இல்லை –ஹாசான் அலி கூறுகிறார்

மக்கள் கூட்டணியில் பாஸ் கட்சிக்கு முக்கியத்துவம் இல்லை –ஹாசான் அலி கூறுகிறார்

680
0
SHARE
Ad

Hasan-Ali-Ex-PASகோலாலம்பூர், பிப்ரவரி 21- கடந்த ஐந்தாண்டுகளாக பாக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணியில் இருந்தபோதிலும் பாஸ் கட்சி எந்தவித முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்றும், ஜசெக, பிகேஆர் போன்ற பலம் வாய்ந்த கட்சிகளின் ஆதிக்கத்தால் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்தும் இல்லாததைப் போன்ற ஒரு சூழ்நிலையில் பாஸ் இருந்து வருகின்றது என்றும் முன்னாள் சிலாங்கூர் பாஸ் கமிஷனர் டத்தோ டாக்டர் ஹாசான் அலி (படம்) தெரிவித்தார்.

பல்வேறு பிரச்சினைகளை ஆதாரமாகக் கொண்டு இதனை அவர் தெரிவித்தார். அதில் ‘அல்லா’ என்ற பெயரை உச்சரித்தல், கிளந்தானில் முடிதிருத்தும் நிலையங்களுக்கான உரிமம் வழங்குவதில் மாறுபட்ட விதிமுறைகள், கெடா மாநில அரசு பொழுதுபோக்கு நிலையங்களை ரத்து செய்தது, ஹூடுட் சட்டம், — மற்றும் இஸ்லாமிய மாநிலம் போன்ற விவகாரங்களும் இதில் அடங்கும் என்றார் அவர்.

புக்கு ஜிங்கா என்ற ஆரஞ்சு புத்தகத்தில் வெளியிடப்பட்ட பாக்காத்தான் ராயாட்டின் செயல்திட்டத்தில், மலாய்க்காரர்களின்  ஆட்சி உரிமை வழங்குதல் பற்றிய பாஸின் வலியுறுத்தல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியின் இந்த குறைகளை ஜசெக தனக்கு சாதகமாக்கி தமது கட்சி கோட்பாடுகளை பரப்புகிறது என்றும்  ஹாசான் தெரிவித்தார்.