இப்படத்தை தயாரித்த ஆஸ்கார் ரவி சந்திரன் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, “இப்படம் கண்டிப்பாக தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22-ம் தேதி திரைக்கு வரும்.
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கவுள்ளது. இவ்விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா அதன் பின்னர் சில நாட்கள் கழித்து நடக்கவுள்ளது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அதிரடி நாயகன் ஜாக்கி சான் கலந்துகொள்ளவுள்ளார்” என ஆஸ்கார் ரவி சந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த பட்டியலில் இன்னும் சில படங்கள் இணைய வாய்ப்பு உள்ளது. அல்லது இந்த படங்களில் ஏதாவது ஒன்று வெளியாகும் தேதி தள்ளிப் போகவும் வாய்ப்பு உள்ளது.