Home நாடு மக்களை பெரிதும் கவர்ந்த பெட்ரோனாசின் ‘சுதந்திர தின’ விளம்பரப்படம்!

மக்களை பெரிதும் கவர்ந்த பெட்ரோனாசின் ‘சுதந்திர தின’ விளம்பரப்படம்!

576
0
SHARE
Ad

Petronas

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – மலேசியாவின் 57 -வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 31 -ம் தேதி வருவதை முன்னிட்டு, நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோனாஸ், 3.28 நிமிடங்கள் ஓடக்கூடிய விளம்பரப்படம் ஒன்றை தங்களது யூடியூப் அதிகாரப்பூர்வ ஊடகத்தில் வெளியிட்டுள்ளது.

சுதந்திர காலம் தொடங்கி, கடந்த 57 ஆண்டுகளில் மலேசியாவின் வளர்ச்சியையும், மாற்றங்களையும் சொல்லும் இந்த படத்தில், இரண்டு சிறுவர்களின் நட்பு காண்பவர் அனைவரையும் கவர்ந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

“AWalkThroughTime” என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 24 -ம் தேதி வெளியிடப்பட்ட அந்த விளம்பரப்படத்தை இதுவரை 876,437 பேர் பார்த்துள்ளனர். 1,652 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் நடைபெறும் ஒவ்வொரு முக்கிய விழாக்களுக்கும் பெட்ரோனாஸ் இதுபோன்ற விளம்பரப் படங்களை வெளியிட்டு மக்கள் மனதை கொள்ளை கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோனாஸ் வெளியிட்ட அந்த விளம்பரப்படத்தை கீழே உள்ள இணைப்பின் வழியாகக் காணலாம்:-