Home இந்தியா ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு!

521
0
SHARE
Ad

jayalalithaபெங்களூரு, ஆகஸ்ட் 29 – முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், சசிகலா ஆகியோர் மீது 1997ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 1998ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இந்த நிலையில் சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் செவ்வாய்கிழமை தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.

அவர் மொத்தம் 8 நாட்கள் வாதிட்டு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். இதையடுத்து அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரின் இறுதி வாதமும் முடிவடைந்துவிட்டது.

17 ஆண்டுகாலமாக நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ளதால், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் திக் திக் மனநிலையில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.